Type Here to Get Search Results !

அடர்ந்த மரங்களின் நிலப்பகுதியே அடர்ந்த காடுகள்

 அடர்ந்த மரங்கள் நிலப்பகுதியே 'காடுகள்' என்று அழைக்கப்படுகிறது. மேலும் காடுகளுக்கு சில பெயர்கள் உண்டு. அவைகள் வனம், கானகம், பொதும்பு, புறவு, அடவி என்ற பெயர்களும் உண்டு.  



 

அடர்ந்த காடுகள் என்பது நாட்டின் அரண்' என்பர்கள் சான்றோர்கள். காடுகளைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் அரும்பாடுபட்டு வருகின்றன. காடுகளினால் கிடைக்கும் நற்பலன்கள் எண்ணில் அடங்காதவை. காடுகளினால் நமக்கு உண்டாகும் பலன்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.


காடுகளைப் 'பசுமைப்பொக்கிசம்' என்று அழைத்தால் அதில் தவறில்லை. காடுகளின் பலன்கள் தெரிந்தே மத்திய அரசு 'வனத்துறை பாதுகாப்பு' என்ற ஒரு அமைச்சகத்தையே உருவாக்கியது.



விறகுகளுக்காகவும் ஏனைய மரச்சாமான்ககளை உருவாக்கவும் நாம் வெட்டி அழித்த காடுகள் எண்ணில் அடங்காதவை. காடுகள் அழிந்து போகுமாயின் அது நாட்டை மட்டுமல்ல அனைத்து உயிர்களுக்கும் பேராபத்து, உலகம் மிகப்பெரிய அழிவை சந்திக்கும் என்பதை நாம் நாகு புரிந்து கொள்ள வேண்டும்.


இது அரசாங்கத்திற்கு மட்டுமல்ல, காடுகளைப் பாதுகாக்கும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.


காடுகளே மழைக்கு முக்கிய காரணமாக விளக்குகிறது. அடந்த மரங்கள் கொண்டிருக்கும் காடுகளே, கார்மேகங்களை குளிர்வித்து மழையைப் பொழிவிக்க மிகப்பெரிய காரணமாக இருக்கிறது.



மழையில்லையேல் நாட்டில் வளமேது? காலத்தே மழைபெய்யாவிடில் நாட்டில் வறட்சி, பஞ்சம், பற்றாக்குறை, குடிநீர் தட்டுப்பாடு, தானியங்கள் விளையாமை என பல தீமைகள் விளையும்.


காடுகளில் இருக்கும்  அடர்ந்த மரங்களின் வேர்கள் மண்ணில் பரந்துவிரிந்த ஊடுருவி இருப்பதாலேயே மண்ணின் தன்மை கெட்டியாக இருக்கிறது. மரங்கள் இல்லையெனில் மண் இளகி ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட காரணமாக ஆகிறது.


இது தவிர காடுகள் மூலிகைகளின் பொக்கிசமாகும். சித்த மருத்துவத்தில் பயன்படும் அனைத்துவிதமான  மூலிகைகளையும் தருவது இந்த காடுகளே என்பதை நாம் மறந்து விடக்கூடாது.


தேன், ஏலம், மிளகு, காய், கனிகள் போன்ற உணவுப் பயிர்களைத் தருவது காடுகளே. மரச்சாமான்கள் செய்யப்பயன்படும் தேக்கு, கருங்காலி, போன்ற மரங்களை விளைவிப்பதும் காடுகள்.

பறவைகளின் சரணாலயங்களாகவும் விலங்குகளின் சரணாலயங்களாகவும் விளங்குவது காடுகளே.


யாரும் பராமரிக்காமல் இயற்கையின் வரப்பிரசாதமாக விளங்கும் காடுகள் மனிதர்க்கு இத்தனைப் பயன்களை அள்ளி வழங்குவதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.




காடுகளின் பலன்கள் பற்றித் தெரிந்தால் நாம் காடுகளை இருக்கும்  மரங்களை தேவையின்றி வெட்டமாட்டோம். காடுகளை பாதுகாப்போம். 


ஒரு மரத்தை வெட்டப்பட்டால்  கண்டிப்பாக இரு மரங்களை நடுவேண்டும் என்று இன்று அனைத்து இடங்களிலும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இதை நாமும் செயல்படுத்த வேண்டும். மேலும் புதியதாக வளர்ந்து நமது வருங்கால சந்ததியினரை நலமுடன் வாழவைப்போம்.


நல்ல காற்றையும், மழையையும் உணவையும் தந்து மனிதர்களை வாழவைக்கும் காடுகளைப் பாதுகாத்து பதில் நன்றியைச் செலுத்துவோம் மக்களே. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.