அம்மை நோய் தாக்கிய புறாக் குஞ்சு, சிகிச்சை அளித்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்
பொள்ளாச்சியில் அம்மை நோய் தாக்கிய புறாக் குஞ்சுவுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்களான இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளை மற்றும் பசுமைக்குரல் பொதுநல அறக்கட்டளை ஒன்றிணைந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
பொள்ளாச்சி அன்சாரி வீதியில் ஒரு தனியார் உணவகம் உள்ளது. அந்த உணவகத்தின் கட்டிடத்தின் பக்கவாட்டில் உள்ள சிறிய பகுதிகளில் அதிகப்படியான புறாக்கள் வாழ்கிறது. பகல் நேரத்தில் உணவிற்காக வெளியே சென்று, இரவு நேரங்களில் அந்த கட்டிடத்தில் தங்கும். அங்கேயே முட்டையிட்டு குஞ்சு பொறித்து புறாக்களின் எண்ணிக்கையை அதிகரித்து நகரத்தில் வாழ்கிறது.
அருகே வாழ்ந்துவந்த புறாக் குஞ்சுவுக்கு அம்மை நோய் தாக்கப்பட்டு ஒரு கண் முழுவதும் மூடிய நிலையில், கண் தெரியாமல் கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்துள்ளது. இதை பார்த்த ஆர்.ராதாகிருஷ்ணன்.பி.ஏ.எல்.எல்.பி. (நோட்டரி)வழக்கறிஞர், புறாக் குஞ்சுயை கைப்பற்றி தன் பராமரிப்பில் வைத்திருந்தார். பிறகு பசுமைக்குரல் பொதுநல அறக்கட்டளையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, விரைந்து வந்த பசுமைக்குரல் அறக்கட்டளையினர் வழக்கறிஞருடன் கலந்து ஆலோசித்து, இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து உடனே சென்று இயற்கையை நேசி அறக்கட்டளையினர் புறாக் குஞ்சை பெற்றுக்கொண்டு கால்நடை மருத்துவரிடம் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மருத்துவரின் அறிவுறுத்தலின்படி புறாக் குஞ்சுவுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது, புறாக் குஞ்சு இயற்கையை நேசி அறக்கட்டளையின் பாதுகாப்பில், சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அம்மை நோய் புறாக்களுக்கு தாக்கப்பட்டால் முதலில் பரு உண்டாகி பிறகு சீழ் கட்டிகளாகி கொப்பளங்களாகி உடைந்து பரவக்கூடும். இந்த சமயத்தில் உடல் முழுதும் வெப்பம் அதிகரிக்கும் என்பதால் தீவிர கவனிப்பு தேவைப்படுகிறது. இயற்கையை நேசி அறக்கட்டளையின் கண்காணிப்பில் புறாக் குஞ்சுயை கவனிக்கப்படுகிறது.
இதுபற்றி இயற்கையை நேசி அறக்கட்டளையினர் கூறியபோது: புறாக் குஞ்சுவுக்கு மருத்துவர்கள் ஆலோசனைப்படி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் குணமாகி, முழு உடல்தகுதியும் பெற்றதும், அதன் உறவுகளோடு சுதந்திரமாக வானில் சிறகடித்து பறக்க விடப்படும் என்று தெரிவித்துள்ளனர்.