அவ்வளவு எளிதில் கண்களுக்கு கிடைக்காத ஒன்று. கேளை ஆடு என்ற வகை மானின் குட்டி.
இந்த வகை மான்கள் மிக கூச்ச சுபாவம் கொண்டவை. வளர்ந்த மான்களே கூட சிறு சத்தத்திற்கு ஓடி மறைந்து விடும். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கான்ஹா புலிகள் காப்பகத்தில் ஒரு காலை நேரத்தில் இரையை வேட்டையாட சென்ற ஒரு பெண் புலியை தொடர்ந்து செல்லும் போது இந்த குட்டியையும் அதன் தாயையும் பார்க்க நேர்ந்தது. தாய் வாகனத்தின் வருகையை கண்ட அடுத்த நொடி புதருக்குள் ஓடி ஒளிந்து கொண்டது. ஆனால் அதன் பின்னரும் எதோ ஒன்று இலைகளுக்குள் நகர்வதை கண்டு புகைப்பட கருவியின் உதவியை நாடிய போது ஒரு சின்ன உருவம் தென்பட்டது.
முயல் என்று நினைத்தோம். பின்னர் தாய் மானின் அழைப்பு திரும்ப திரும்ப வந்தது. இந்த மானின் அழைப்பு நாய் குரைப்பதை போன்று இருக்கும். அந்தச் சின்ன உருவம் மெல்ல அந்த அழைப்பின் வழி சென்றது. ஓர் இடைவெளியில் அது அந்த பெண் மானின் குட்டி என்பது தெளிவாக தெரிந்தது.