"உணவிற்காக உயிரை பணயம் வைக்கும் யானைகள்" என்பது சரியா ?...
"உயிரைப் பணயம் வைக்கின்ற" என்கிற வார்த்தைகளெல்லாம் இயற்கையோடு ஒத்துவாழாத மனிதர்களுக்கு வேண்டுமானால் பொருந்தலாம்...
ஆனால், யானைகள் உட்பட அனைத்து உயிர்களுமே காலச் சூழ்நிலைகளை அனுசரித்து, இயற்கையின் மாறுதலுக்கேற்ப தங்களை மாற்றிக் கொண்டதாலேயேதான், நாம் புரிந்து கொள்ளாமல், சிக்கல்கள் நிறைந்தது என நினைக்கின்ற இந்த பூமியில் இதுவரை அவைகள் தப்பிப் பிழைத்திருக்கின்றன, என்பதே அறிவியல் உண்மை....
ஆக, சரிவுகளில் உணவுதேடும் நிலை என்பது உயிரை பணயம் வைக்கிற நிலை இல்லை. அவைகளின் "வாழ்வியல் இயல்பு"களில் இதுவும்கூட ஒன்றுதான்...
மலைகளை ஒட்டியபடி கீழே எங்கும்,
செங்கல் சூளைகள்...
ஆசிரமங்கள்...
கல்வி நிறுவனங்கள்...
ஆராய்ச்சி நிறுவனங்கள்...
தொழிற்சாலைகள்...
மலைகளுக்கு மேலான உச்சியில் காபி, தேயிலை தோட்டங்கள்...
ரிசார்ட்டுகள்....
என மனிதர்களின் சொகுசிற்கும், தேவைக்கும், கேளிக்கைகளுக்கும் தோதான இடங்கள்....
இப்படி மனிதர்களது வாழ்வின் வசதிகளுக்கேற்ப, யானைகளின் விருப்பமான சமவெளி வாழ்விடங்களை கடந்த சில நூற்றாண்டுகளில் தின்று ஏப்பம் விட்டுவிட்டு, யானைகளை மலைச்சரிவிற்கு துரத்தியபின்,
யானை சரிவில் உணவின்பொருட்டு, சரிந்து கொண்டிருக்கிறது எனக் கூச்சலிடுவதில் அர்த்தமே இல்லை....
காடுகளை மலைகளும் அவற்றையொட்டிய பகுதிகளும் என நாம் சுருக்கியபின், யானைகளை நாம் மலைக்கு கீழேயும் அனுமதிப்பதில்லை, மலைக்கு மேலேயும் அனுமதிப்பதில்லை. பிறகு அவை எங்கேதான் போகும் ? இப்படி சரிவில்தான் சாகசம் செய்ய வேண்டிய நிலைக்கு நாம் கொண்டு வந்துவிட்டோம்....
இதோடு பல எதார்த்தமான அறிவியல் உண்மைகளையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்...
பலகோடி ஆண்டுகளுக்கு முன்னர் இப்போது நாம் பார்க்கிற வடிவத்தில் யனைகள் இல்லவே இல்லை என்பதே உண்மை. தங்களது உணவின் தேவைக்காகவும், இனப்பெருக்க காரணத்திற்காகவும், எதிரிகளிடமிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும் யானைகள் பல படி நிலைகளை தாண்டித்தான் இப்போதைய உருவத்தில் இருக்கிறது...
பரிணாம வரலாற்றை ஆழமாக பார்த்தோமானால், இன்றைய நவீன மனிதர்கள் இடையே வந்து செல்பவர்கள் மட்டுமே. மனிதகுல வரலாற்றில், அதுவும் சமீபத்தைய நூற்றாண்டுகளில் வந்தோமா பார்த்தோமா என்றில்லாமல், இந்த பூமியை மனிதர்கள் தங்களது சுய லாபத்திற்காக, மிக மிக சிதைத்த காரணத்தால் இங்கிருந்து செல்கிற வாய்ப்பை மனிதர்களாகிய நாம் முதலில் அடைந்து விட்டோம் என பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் சொல்கிறது...
உழைப்பே இல்லாமல், தின்று கொழுத்து அசையாப் பிண்டங்களாக மாறிய நம்மைப் போன்ற மனிதர்களால் இந்த பூமியில் இனி வாழ்வது என்பது மிக மிக சிரமம்தான். இதை இதுவரை சிறிதுகூட புரிந்து கொள்ளாமல் இருக்கும் மனிதர்களுக்கு புரிய வைக்கவே முடியாது...
அதனை ஓரளவு புரிந்து கொண்டவர்கள் என்கிற கணக்கில் லட்சத்தில் சுமார் பத்துபேர் இருப்பார்களா என்பதுகூட சந்தேகம்தான். புரிந்துகொண்டு வாழும் மனிதர்களில் இந்தப் படத்தை படம்பிடித்த தம்பி
Lenin Raj
ம் ஒருவர்....நம்மைவிட உருவத்தில் பெரிய யானைகள் அடுத்த கட்டத்திற்கு தங்களை நகர்த்த தாயாராகிக் கொண்டிருப்பதற்கு இந்தப் படமே பெரும் சாட்சி...
இயற்கையோடு ஒன்றி வாழ்கிற அனைத்து உயிர்களும் தங்களை இந்த பூமியில் நிலைநிறுத்திக் கொள்ள இதுபோன்ற மாற்றங்கள் எதையாவது செய்து கொண்டேதான் இருக்கும். இதுவெல்லாம் நமக்கு கொஞ்சமும் புரியாது. புரிந்து கொள்ளாத மூடர்களாகிய நாம் இப்படி எதாவது ஒன்றை சொல்லி பிதற்றிக்கொண்டேதான் இருப்போம்....
ஆமாம் நான் கேட்கிறேன், மனிதர்கள் இந்த பூமியில் நிலைத்து வாழ அடுத்து என்ன செய்யப் போகிறோம் ?....
ஏராளமாக மரம் நடுவோம் என்கிறீர்களா ? அதுவெல்லாம் உடனடியாக வேலைக்காகும் என நினைகிறீர்களா ? சமீபத்திய ஐநாவின் அறிக்கைகளை படித்துப் பாருங்கள். பிறகு ஒரு முடிவுக்கு வாருங்கள்...
இதுபற்றி உங்களது பின்னூட்டங்களைப் பொறுத்து அடுத்தடுத்தடுத்து நிறையப் பேசுவோம் எனக் கூறிக் கொண்டு...
என்றென்றும் யானை விரும்பி,
Ramamurthy Ram