பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் - செவிலியர்களுக்கு தன்னார்வலர்கள் முழு கவச உடை வழங்கல்
பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் - செவிலியர்களுக்கு முழு கவச உடை தன்னார்வலர்களால் வழங்கப்பட்டது.
பொள்ளாச்சியில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு, பொள்ளாச்சி, வால்பாறை, டாப்சிலிப், ஆனைமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள நூறுக்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற வந்து செல்கின்றனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. நேற்று (சனிக்கிழமை) 21 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிவுள்ள நிலையில் பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் - செவிலியர்களுக்கு முன்னெச்சரிக்கையாக முழு கவச உடை வழங்க தன்னார்வலர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி, தன்னார்வலர் ஆச்சி பட்டி தினேஷ் குமார் சுமார் 21,000 ரூபாய் மதிப்புள்ள 60 எண்ணிக்கை கொண்ட முழு கவச உடைகளை மருத்துவர் திருமதி.வனஜா அவர்களிடம் வழங்கினார்.